Pallangalellaam nirambida vaendum
Malaigal kuntugal thagarnthida vaendum
konalaanavai naeraaganum
karadaanavai samamaaganum (2)
Raajaa varugiraar ayathamavom (2)
Yesu varugiraar
Ethir kondu selluvom (2)
1. Nalla kanikodaa marangalellaam
Vettundu akkiniyil podappadum (2)
2. Kothumaiyai pirithu kalanjiyathil serthu
Patharaiyo akkiniyil suteripaarae (2)
3. Analil vaanam venthu aliyum
Boomiyellaam erinthu urugi pogum (2)
4. Karaiyilamalae kutamillamalae
Kartharukkaay vaalnthu munnaeruvom (2)
5. Anuthinamum jebathil vilithiruppom
Abishaega enneyaal nirambiduvom (2)
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும் (2)
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)
இயேசு வருகிறார்
எதிர்கொண்டு செல்வோம் (2)
1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் (2)
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே (2)
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் (2)
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் (2)
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் (2)