Paareer arunothayam pol
Uthithu varum ivar yaaro
Mugam sooriyan pol piragaasam
Satham peru vella iraichal pola (2)
Yesuvae aathma naesarae
Saaronin rojaavae leeli pushpamumam
Pathinaayirangalil siranthor (2)
1. Kaattu marangalil kichili pol
Enthan naesar atho nirkiraar
Naamam oottunda parimalamae
Inbam rasathilum athi mathuram (2)
2. Avar idathu kai en thalai keel
Valakkarathaalae thaettugiraar
Avar naesathaal sogamaanaen
En mael parantha kodi naesamae (2)
3. En piriyamae roobavathi
Ena alaithidum inba satham
Kaettu avar pinnae odiduvaen
Avar samoogathil magilnthiduvaen (2)
4. En naesar ennudaiyavarae
Avar maarbinil saaynthiduvaen
Manavaaliyae vaa enbaarae
Naanum selvaen anaeramae (2)
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல (2)
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர் (2)
1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் (2)
2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே (2)
3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் (2)
4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே (2)