Varalatrinaiye erandai pritha athisayavane
Puvi meetidave mannil vanthire
Then eninaimaiyulum inimaiyana alagiyavane
Peroliyil ennai nadaka seithire
Nenga vanthitathala pavam pochu
Kavalai ellan poye pochu
Sabangal ellan maranchu ponathe
Devan barathil erundhu irangi vantheer
Manithanaga mari inge
Adimai ennaiyum meetu kondere
Nan ummai potruven
Nan unnai pugaluven dinam
Nandri solli anbai padi
Ummai vanaguven
En immanuvel neere neer enodu irukindrere
Eni ennalume um nammame padi pottruvene (2)
Aathi thiruvarthaiye vedivelli natchathirame
Paraloga rajave neerthan yesaiya
Kanniyin maidhanaga yutha raja singamaga
Deva aattu kuttiyai vanthir yesaiya
Niyaya piramanathai
Niraivetrina devan neere
Puthu udanbadikaiyin mathiyastharum neere neere
Deva kirubaiyin mulu uruvam neere neere
Neer Ennodirukkum ovvovru nalum
kalikoorthu paduven
En immanuvel neere neer ennodu irukindrere
Eni ennalume um nammame padi pottruvene (2)
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே
தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே
பேரொளியில் என்னை நடக்க செய்தீரே
நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
கவலை எல்லாம் போயே போச்சு
சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே
நான் உம்மைப் போற்றுவேன்
நான் உம்மைப் புகழுவேன் தினம்
நன்றி சொல்லி அன்பை பாடி
உம்மை வணங்குவேன்
என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே (2)
ஆதி திருவார்த்தையே விடிவெள்ளி நட்சத்திரமே
பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா
கன்னியின் மைந்தனாக யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசையா
நியாயப்பிரமாணத்தை
நிறைவேற்றின தேவன் நீரே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன்
என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே (2)