Varuvai tharunam ithuve azhaikirare
Valla aandavar yesu andai (2)
1. Vaal naalai ellam veen naalaai
Varuthathode kazhipathu yen (2)
Vanthavar patham saranadainthal
Vaazhvithu unnai serthu kolvar
2. Katina veedum nilam porulum
Kandidum utraar uravinarum (2)
Kooduvittu un aaviponal
Kooda unnodu varuvathillai
3. Azhagum mayai nilaithidaathe
Athai nambaathe mayakidume (2)
Maranam or naal santhikume
Maravathe un aandavarai
4. Vaanathin keele boomi mele
Vaanavar yesu naamam allal (2)
Ratchipadaya vazhi illaye
Ratchagar yesu vazhi avare
5. Theeradha paavam vyadhiyaiyum
Maaradha undhan belaveenamum (2)
Kora kurusil sumandhu theerthaar
Kaayangalaal nee gunamadaiya
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை (2)
1. வாழ்நாளெல்லாம் வீண்நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன் (2)
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்
2. கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும் (2)
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை
3. அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே (2)
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை
4. வானத்தின் கீழே பூமிமேலே
வானவர் இயேசு நாமம் அல்லால் (2)
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே
5. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும் (2)
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய