Visuvaasiye Ninaithuppaar
Nilaipavaigalai Naadu
Nithiya Jeevan Pera (2)
Odi Varuvaaye Indre
Paadi Magizhvaaye Andre (2)
1. Arupu Miguthi Aalo Illai
Veruppil Alaiyum Maanthar Miguthi (2)
Ninaithu Pulambi Alainthu Thedu (2)
Seyalpattaal Indre Magizhuvaai Andre (2)
2. Nee Pogaavidil Yaar Povaar
Ipothillaavidil Eppo (2)
Kanakku Ketpaar Enna Seivaai (2)
Kanneer Viduvaayo Kartharai Kandu (2)
3. Nee Pesaavidil Karkal Pesum
Nee Illaavidil Vere Yaaro (2)
Manam Thirumbu Ulagathai Vittu (2)
Seyalpattaal Indre Magizhuvaai Andre (2)
4. Varugaiyin Naal Sameebame
Vallamai Devan Velippadave (2)
Boomi Azhiyum Boothalam Eriyum (2)
Serthitta Pokkisham Yaarukku Serum (2)
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற (2)
ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே (2)
1. அறுப்பு மிகுதி ஆளோ இல்லை
வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி (2)
நினைத்து புலம்பி அலைந்து தேடு (2)
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே (2)
2. நீ போகாவிடில் யார் போவார்
இப்போதில்லாவிடில் எப்போ (2)
கணக்கு கேட்பார் என்ன செய்வாய் (2)
கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு (2)
3. நீ பேசாவிடில் கற்கள் பேசும்
நீ இல்லாவிடில் வேறே யாரோ (2)
மனம் திரும்பு உலகத்தை விட்டு (2)
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே (2)
4. வருகையின் நாள் சமீபமே
வல்லமை தேவன் வெளிப்படவே (2)
பூமி அழியும் பூதலம் எரியும் (2)
சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும் (2)