Vinthai kiristhaesu rajaa!
Unthan siluvaiyen maenmai (2)
Suntharamigum intha poovil
Entha maenmaigal enakirupinum (2)
1. Thiranda aasthi, uyarntha kalvi
Selvaakkugal enakkiruppinum (2)
Kurusai Nokki paarkka enakku
Uriya perumaigal yaavum arpamae (2)
2. Um kuruse aasikkellaam
Oottram vattra jeeva nathiyaam (2)
Thunga ratha oottil moolgi
Thooymaiyadainthae maenmaiyaaginaen (2)
3. Senni, vilaa, kai, kaanintu
Sinthutho thuyarodanbu, (2)
Manaa ithai ponta kaatchi
Ennalilumae engum kaanen (2)
4. Intha vinthai anbukeedaay
Enna kaanikkai eenthiduvaen (2)
Entha arum porul eedaagum?
Ennai muttilum umakkalikkiraen (2)
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்
என்ன மேன்மைகள் எனக்கிருப்பினும் (2)
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும் (2)
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே (2)
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் (2)
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் (2)
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு, (2)
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் (2)
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன் (2)
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் (2)