1. Enakkai karuthuvaar ennai boshipaar
Endhan thevaigal ellaam sandhippaar
Thunba naalil kaividaamal
Tham siragin nizhalil maraippar
Nambuvadharku enakkentrum
Sarva vallavar kooda iruppaar
Thalaraamal vanaandhirathil
Prayaanam seiven nambikkaiyodu
2. Pollaappugal neridaadhu
Vaadhaiyo unnai anugaadhu
Paadhaigalil Dhevanudaiya
Thoothargal karangalil thaanguvaar
3. Iravinile bayangaramum
Pagalil parakkum ambugalukkum
Irulathile nadamaadum
Kollai noigalukkum naan bayappadaen
4. Seruvaen naan Yesuvudan
Avar naamathin vallamai arivaen
Kashta naatkalil kooda iruppaar
Theerkkaayusai thirupthiyaakkuvaar
1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்
நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வ வல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு
2. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார்
3. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன்
4. சேருவேன் நான் இயேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார்