Innum Thuthippen Innum Potruven
Innum Ummai Aarathippen
Ekkalamum Naan Thuthippen
Enneramum Naan Potruven
1. Vyathiyin Vethanai Peruginaalum
Maranathin Bayam Ennai Soolnthalum
Meendum Eluppiduveer Belan Koduthiduveer
Unthan Thalumbugalal Kunamakkiduveer
2. Nambikkai Yavumae Ilanthalum
Ellamae Mudinthathu Endralum
Enthan Kallaraiyin Kallai Puratiduveer
Ennai Marubadiyum Uyirthelumba Seiveer
Nallavar Vallavar Sarva Vallavar
3. Thanimayin ennangal soolnthaalum
Kannerae padukayai maarinaalum
Ennai aravanaithu kattiyelupiduveer
Naan Ilanthavattai iratippai tharuveer
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன்
1. வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்
மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர்
2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும்
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர்
நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர்
3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்