Antho Kalvaariyil Arumai Iratchagarae
Sirumai Adainthae Thonginaar (2)
1. Magimai Maatchimai Maranthilanthoraay
Kodumai Kurusai Therintheduthaarae (2)
Maayalogatho Daliyaathu Yaan
Thooya Kalvaariyin Anbai Andidavae (2)
2. Alagumillai Sounthariyamillai
Antha Kaedutar Enthanai Meetka (2)
Pala Ninthaigal Sumanthaalumae
Pathinaayiram Paerilum Siranthavarae (2)
3. Mulin Mudiyum Sevvangi Aninthum
Kaal Karangal Aanigal Paaynthum (2)
Kuruthi Vadinthavar Thonginaar
Varunthi Madivoraiyum Meettidavae (2)
4. Athisayam Ithu Yesuvin Thiyagam
Athilum Inbam Anbarin Snegam(2)
Athai Enniyae Nitham Vaaluvaen
Avar Paathaiyae Naan Thodarnthaegidavae (2)
5. Siluvai Kaatchiyai Kandu Munnaeri
Sevaiyae Purivaen Jeevanum Vaithae (2)
Ennai Sernthida Varuvaenentar
Entum Unnmaiyudan Nambi Vaalnthiduvaen (2)
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார் (2)
1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே (2)
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே (2)
2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க (2)
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே (2)
3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும் (2)
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரை மீட்டிடவே (2)
4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம் (2)
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே (2)
5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே (2)
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் (2)