Kalvaari Malaiyoram Vaarum Paavam Theerum
Selvaraayan Kiristhu Thiyaagaesan Thonguraarae
1. Logathin Paavamellaam Aegamai Thiranndu
Nombala Padavaika Aiyanmael Urundu
Thagathaal Udalvaadi Karugiyae Surundu
Sadalamelaam Uthira Piralayam Purandu
Saagintarae Namathu Thaathaa Jeeva thaathaa
2. Onnmudi Mananukku Munnmudiyaacho
Ubagaaram Purigaram Sithaiyavum Aacho
Vinnilulaavum Paatham Punnaagalaacho
Maeniyellaam Veengi Vithanikkalaacho
Maesaiyan Appan Kobam maelae Itharkumaelae
3. Malarntha Sunthara Kangal Mayangalumaeno
Mathurikkum Thirunaavu Varandathumaeno
Thalarnthidaa Thirukkaigal Thuvandathumaeno
Thanneeril Nadantha Paatham Savandathumaeno
Sandaalargal Nammaalthaanae Nammaalthaanae
4. Ratchaganai Maranthaal Ratchannyam Illai
Naamakkiristhavarkkum Irupangu Thollai
Patchapaatham Ontum Paratheesil Illai
Paratheesil Pangillorkku Paadentum Thollai
Panthayathilae Muntha Paarum Muntha Paarum
கல்வாரி மலையோரம் வாரும் பாவம் தீரும்
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே
1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு
தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு
சாகின்றாரே நமது தாதா ஜீவதாதா
2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ
உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ
மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சோ
மேசையன் அப்பன் கோபம் மேலே இதற்குமேலே
3. மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கலுமேனோ
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ
தண்ணீரில் நடந்த பாதம் சவண்டதுமேனோ
சண்டாளர்கள் நம்மால்தானே நம்மால்தானே
4. ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை
நாமக்கிறிஸ்தவர்க்கும் இருபங்கு தொல்லை
பட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை
பந்தயத்திலே முந்தப் பாரும் முந்தப் பாரும்