WCF London Logo

World Christian Fellowship

அநாதி தேவன் உன் அடைக்கலமே

Anaathi Devan Un Adaikkalamae

Sister Sarah Navaroji
சாரா நவரோஜி

Anaathi devan un adaikkalamae
avar nithiya puyangal un aathaaramae - 2

Intha thaevan entrentumulla
sathaa kaalamum namathu thevan – marana
pariyantham nammai nadathiduvaar - Anaathi

1. Kaarunyathaalae iluthukondaar
thooya thaeva anbae - 2
ivvanaanthiraththil nayangaatti unnai
inithaay varunthi alaithaar - Intha

2. kaanaga paathai kaarirulil
thooya thaeva oliyae - 2
alugai niraintha pallathaakkugalai
arum neeruttai maattinaarae - Intha

3. Kirupai koornthu manathurugum
thooya thaeva anbae - 2
un samaathaanathin udanbadikkai thanai
unnmaiyaay karthar kaathu kolvaar - Intha

4. Varannda vaalkai selithiduthae
thooya thaeva arulaal - 2
nithiya magilchi thalaimael irukkum
sanjalam thavipum odippom - Intha

5. Aanantham paadi thirumbiyae vaa
thooya thaeva belathaal - 2
seeyon parvatham unnai serthiduvaar
santhatham magilchi adaivaay - Intha

அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே - 2

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார் - அநாதி

1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே - 2
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் - இந்த

2. கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே - 2
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே - இந்த

3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே - 2
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் - இந்த

4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால் - 2
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் - இந்த

5. ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால் - 2
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் - இந்த

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram