WCF London Logo

World Christian Fellowship

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

Koda Kodi Sthothiram Yeredupom

Koda kodi sthothiram yeredupom
Raajaathi raajan thaevaathi thaevan
Yesu kiristhuvukkae magimai (2)

1. Parisuthavaangal sabai naduvae
Tharisikkum thaeva samoogathilae (2)
Allaeluyaa allaeluyaa
Aaviyil paadi magiluvom
Aandavar Yesuvai kondaaduvom (2)

2. Kirubaasanathandai nerunguvom
Thiruratham karathil aenthi nirpom (2)
Allaeluyaa allaeluyaa
Kanden sagaayam irakkamae
Karthar kirubai entum ullathae (2)

3. Kuruvi paravai vaanampaadiyae
Kavalaiyinti paranthu paaduthae (2)
Allaeluyaa allaeluyaa
Arputhamaana sirushtigarae
Antha visuvaasam kattarinthom (2)

4. Kavalaippadaatheergal enturaitheer
Kaattu pushpathai uduthuvitheer (2)
Allaeluyaa allaeluyaa
Aadai aagaaram thaevai ellaam
Antantu thanthemmai aatharitheer (2)

5. Kanakkillaa nanmaigal karthar seytheer
Karuthudan paadi nantri kooruvom (2)
Allaeluyaa allaeluyaa
Thaeva kumaaran vanthidum naal
Thuya mugam kanndu kembeerippom (2)

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை (2)

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே (2)
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் (2)

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம் (2)
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே (2)

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே (2)
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம் (2)

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர் (2)
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் (2)

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம் (2)
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram