Jeevanulla devanae vaarum
Jeeva paathaiyilae nadathum (2)
Jeeva thanneer oorum oottilae
Jeevan pera ennai nadathum (2)
Yesuvae neer periyavar
Yesuvae neer parisuthar
Yesuvae neer nallavar
Yesuvae neer vallavar (2)
1. Paavigal thurogigal aiyaa
Paava aathaam makkalae thooyaa (2)
Paathagar em paavam pokkavae
Paathagan pol thongineerallo (2)
2. Ainthu kanda makkalukkaaga
Ainthu kaayamaetta naesarae (2)
Nonthurugi vantha makkal mael
Naesa aavi veesa seyguveer (2)
3. Vaakku thatham seytha kartharae
Vaakku maaraa unmai naathanae (2)
Vaakkai nambi vanthu nirkirom
Valla aavi maari oottuveer (2)
4. Niyaaya theerpin naal nerunguthae
Naesar vara kaalamaaguthae (2)
Maayalogam nambi maandidum
Maanidarai meetka maattiro (2)
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும் (2)
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும் (2)
இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர் (2)
1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா (2)
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ (2)
2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே (2)
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர் (2)
3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே (2)
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் (2)
4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே (2)
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ (2)