Karthar thuyar thoniyai
Kathari muhangavilnthae
Irul soolntha thottathilae
Ithayam norungi jepiththaar
1. Maranathin viyaagulamo
Manithar thunai illaiyo
Thaeva thoothan thaettidavae
Tharunam nerunga oppadaithaar
Thunba sumai sumanthaar
2. Thukkathaal tham seeshargalae
Thalai saaythu thoonginarae
Thammai moovar kaividavae
Thooramay kadanthe thigiladainthar
Thannan thanimaiyilae
3. Pithaavae ippathirathin
Panginai naan aettukkondaen
Aagattum umathu sitham
Athu neengidumo enturaithaar
Aa ratha vaervaiyudan
4. Thirantha gethsamanaeyil
Thuninthu vantha pagainjan
Enna thurogam seythidinum
Enthan sinegithanae entalaithaar
Enna maa anbithuvae
5. Paraman jeba sathamae
Poongaavinil kaetkintathae
Perumoochudan jebikkum
Avarodinainthae kanneerudan
Aaviyiyudan jebippaen
6. Yesu thaangina thunbangal
Ennai thaandiyae sellaathae
Enakkum athil pangundae
Siluvai marana paadugalaal
Seeyonil sernthiduvaen
கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்திலே
இதயம் நொறுங்கி ஜெபித்தார் (2)
1. மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர்
2. துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே – கர்த்தர்
3. பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர்
4. திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்
5. பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர்
6. இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்