Manthaiyil seraa aadugalae
Engilum kodi kodi undae
Sinthaiyil aanma baaram kondae
Thaeduvom vaareer thiruchabaiyae
Manthaiyil seraa aadukalae
Alaikkiraar Yesu
Avaridam paesu nadathiduvaar (2)
1. Kaadugalil pala naadugalil
En janam sitharundu saaguvathaa (2)
Paadupattaen atharkaagavumae
Thaeduvor yaar en aadugalai (2)
2. Sollappattiraatha idangal undu
Enai angu solla ingu aatkal undu (2)
Alaippu pettor yaarum purappaduveer
Ithu aandavar kattalai keelppadiveer (2)
3. Enakkaay paesida naavu vaendum
Ennaipol alainthida kaalgal vaendum (2)
Ennil anbukoora aatkal vaendum
Ithai unidam kaetkiraen thara vaendum (2)
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார் (2)
1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா (2)
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை (2)
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு செல்ல இங்கு ஆட்கள் உண்டு (2)
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் (2)
3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும் (2)
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும் (2)