Nallavare Yesu Nallavare
Nanmaigalai dhinam seibavare (2)
Nandri Solli Paduven Nallellam (2)
1. Alaigal enmethu mothidum bodhu
Kadal mel methu vanthu kai thukki edutheer
Valkai Padagil Ennodu Irunthu
Akkarai serpeer moolgamale
Aalangalil amilamale anbin (undhan)
Karam ennai thangiyathe (2)
Nandri Ayya Nandri Ayya
Naall muluthum Nandri Ayya
Nandri Ayya Nandri Ayya
Nalavare Nandri Ayya
2. Ninthaigal Avamanam Nernthita bodhu
Visuvasa pathayil munnera seitheer
Kavalaigal Sullnthu sorthupona neram
Aaruthal thandhu ennai aravanaitheer
Vethanayil sothanayil
Um kirubai ennai viduvithathe (2)
3. Pavathal ummai Nogaditha bodhu
Manam irangi mannitheer um thayaval
Parisuthamai vala vairakiyam thantheer
Um jeevanai kondu meetukondeer
Alivai nokki pona endhan
Valvai maatineer nallavare (2)
நல்லவரே இயேசு நல்லவரே
நன்மைகளை தினம் செய்பவரே (2)
நன்றி சொல்லி பாடுவேன் நாளெல்லாம் (2)
1. அலைகள் என்மீது மோதிடும் போது
கடல் மேல் மீது வந்து கை தூக்கி எடுத்தீர்
வாழ்க்கை படகில் என்னோடு இருந்து
அக்கரை சேர்ப்பீர் மூழ்கிடாமலே
ஆழங்களில் அமிழாமலே அன்பின் (உந்தன்)
கரம் என்னை தாங்கியதே (2)
நன்றி ஐயா நன்றி ஐயா
நாள் முழுதும் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நல்லவரே நன்றி ஐயா - நல்லவரே
2. நிந்தைகள் அவமானம் நேர்ந்திட்ட போது
விசுவாச பாதையில் முன்னேற செய்தீர்
கவலைகள் சூழ்ந்து சோர்ந்து போன நேரம்
ஆறுதல் தந்து என்னை அரவணைத்தீர்
வேதனையில் சோதனையில்
உம் கிருபை என்னை விடுவித்ததே (2)
நல்லவரே நன்றி ஐயா - நல்லவரே
3. பாவத்தால் உம்மை நோகடித்த போது
மனம் இரங்கி மன்னித்தீர் உந்தன் தயவால்
பரிசுத்தமாய் வாழ வைராக்கியம் தந்தீர்
உம் ஜீவனைக் கொண்டு மீட்டுக் கொண்டீர்
அழிவை நோக்கி போன எந்தன்
வாழ்வை மாற்றினீர் நல்லவரே (2)