Nambikaikku Uriyavarae
Nambi Vanthaen Um Samoogam
Nambugiraen Um Vasanam (2)
1. Sontha Aatralai Nambavillai
Thanthai Ummaiyae Saarnthu Vittaen (2)
Vaakuthatham Seithavarae
Vaalkaiyellaam Um Vaarthai Thaanae (2)
Paathaiku Theebam Paethaiku Velicham
Unthan Vasanamae
Aatral Mikkathu Jeevan Ullathu
Unthan Arulvaakku
2. Ummai Nambugintra Manithargalai
Umathu Anbu Entrum Soolnthu Kollum (2)
Ullamellaam Magiluthaiyaa
Um Vasanam Nambuvathaal (2)
3. Theemai Anaithaiyum Vittu Vilagi
Umakku Anji Naan Nadanthu Kondaal (2)
Elumbugal Uram Perum
En Udalum Nalam Perum (2)
4. Puyalin Naduvilae Bakthan Pavul
Vaarthai Vanthathaal Thidan Kondaan (2)
Kaithiyaaga Kapal Aeri
Captain Aga Seyal Pattan (2)
5. Vaarthai Nambiyathaal Valaikal Veesi
Thiralaai Paethuru Meen Pitithaar (2)
Um Valaiyil Pidipattar
Thalaivanaaka Seyalpattar (2)
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் (2)
1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் (2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே (2)
பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
2. உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)
உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
உம் வசனம் நம்புவதால் (2)
3. தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2)
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும் (2)
4. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டார் (2)
கைதியாக கப்பல் ஏறி
கேப்டனாக செயல்பட்டார் (2)
5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார் (2)
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார் (2)