WCF London Logo

World Christian Fellowship

பாவம் பெருகுதே

Paavam Peruguthae

Paavam peruguthae
Paarum paran Yesuvae
Aliyum manugulam
Athaiyum iratchippeerae (2)

1. Aathuma iratchipilanthavar
Aayiram aayiramaay (2)
Antadagam intha mannadiyil
Alinthu saagintarae (2)

2. Iratchippin narseythi kaettavar
Echarippai veruthu (2)
Iratchagar Yesuvai ilanthoraay
Intum kettaligintar (2)

3. Thaniyael pola jebithidum
Thaasar palar marainthaar (2)
Thirappin vaasalil nirkum silar
Thoongi kalaithu ponaar (2)

4. Emathu kaariyamaagavae
Yaarai anupiduvaen (2)
Entavar alaikkum inba satham
Ennullam thonikkuthae (2)

5. Jeevanai veruthu thiyaagamaay
Sevaiyum seythiduvaen (2)
Jeevanukeedaaga janangalai
Jeeva thaevan tharuvaar (2)

6. Verungaiyaay paralogathil
Vanthitaen Yesu naathaa (2)
Aathuma aathaayam seythidavae
Aaseer polinthanuppum (2)

பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே (2)

1. ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய் (2)
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே (2)

2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து (2)
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார் (2)

3. தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார் (2)
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கி களைத்துப் போனார் (2)

4. எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன் (2)
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே (2)

5. ஜீவனை வெறுத்து தியாகமாய்
சேவையும் செய்திடுவேன் (2)
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார் (2)

6. வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா (2)
ஆத்தும ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram