Pasumaiyaana pulveliyil
Padukka vaippavarae (2)
Amaithiyaana thanneerandai
Alaithu selbavarae (2)
En maeypparae nal aayanae
Enakkontum kuraiyillappaa (2)
Noyillaatha sugavaalvu enaku thanthavarae
Karam pidithu kadanilamal nadathi selbavare
1. Puthiya uyir thinam thinam
Enakku tharugireer
Um peyarukkaerpa parisuthamaay
Nadathi selgireer (2)
2. Marana irul pallathaakil
Nadakka naernthaalum
Appaa neenga iruppathaalae
Enakku bayamilla (2)
3. Jeevanulla naatkalellaam
Nanmai thodarumae
Thaevan veettil thinam thinam
Thangi magilvaenae (2)
4. Karangalaalae anaithu konndu
Sumanthu selgireer
Maranthidaamal unavu koduthu
Belan tharugireer (2)
5. Enathu ullam abishaegathaal
Nirambi valiyuthae
Ellaa naalum nanti paadal
Paadi magiluthae (2)
பசுமையான புல்வெளியில்
படுக்க வைப்பவரே (2)
அமைதியான தண்ணீரண்டை
அழைத்துச் செல்பவரே (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா (2)
நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
1. புதிய உயிர் தினம் தினம்
எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்
நடத்திச் செல்கிறீர் (2)
2. மரண இருள் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே
எனக்குப் பயமில்ல (2)
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம்
தங்கி மகிழ்வேனே (2)
4. கரங்களாலே அணைத்துக் கொண்டு
சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து
பெலன் தருகிறீர் (2)
5. எனது உள்ளம் அபிஷேகத்தால்
நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல்
பாடி மகிழுதே (2)