Seeraar Vivaaham Yethaen Kaavilae
Naeraai Amaitha Theva Thevanae
Thaaraai Mandral Aasiye
Vaaraai Subam Serave
Naeyane Mahaa Thooya Theva Thevanae
Seer Mevum Mei Manaasi Nee Tharavaa
Naeyane Mahaa Thooya Theva Thevanae
Seer Maevume Aasithaa
1. Mangala Manamagan {avargalukkum}
Mangala Manamangal {ammaalukkum }
Neya Deva Thayavaai
Paasathunai Serthuvai – Naeyanae
2. Nadoorum Sella Paathai Theebamay
Naadu Uyarntha Thaeva Noolathai
Thaedithunai Konndanbaay
Needithivar Vaalnthida – Naeyanae
3. Aantor Ennaalum Pottum Seyarum
Vaanor Sirantha Kalvi Selvamum
Saantor Pottum Naeyarum
Thontithigal Seerarul – Naeyanae
4. Vaazha Vaazha Yendrum Immanar
Vaazha Ilangum Thanthai Thaayarum
Vaazha Sutrathaar Anbar
Vaazha Suba Mandralum – Naeyanae
சீரார் விவாகம் ஏதேன் காவிலே
நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்றலாசியே
வாராய் சுபம் சேரவே
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவுமே ஆசிதா
1. மங்கள மணமகன் {அவர்களுக்கும் }
மங்கள மணமகள் {அம்மாளுக்கும் }
நேச தேவ தயவாய்
பாசத்துணை சேர்த்துவை – நேயனே
2. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
நாடு உயர்ந்த தேவ நூலதைத்
தேடித்துணை கொண்டன்பாய்
நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே
3. ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
வானோர் சிறந்த கல்விச் செல்வமும்
சான்றோர் போற்றும் நேயரும்
தோன்றித்திகழ் சீரருள் – நேயனே
4. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
வாழ்க சுற்றத்தார் அன்பர்
வாழ்க சுபமன்றலும் – நேயனே