WCF London Logo

World Christian Fellowship

சேனைகளின் கர்த்தர் நல்லவரே

Senaigalin Karthar Nallavarae

Sarah Navaroji
சாராய் நவரோஜி

Senaigalin karthar nallavarae
Sethaminti nammai kaappavarae
Sornthidum naerangal thaettidum vaakkugal
Sothanai ventida thantharulvaar (2)

Ekkaalathum nambiduvom
Thikkatta makkalin maraividam
Pakkabalam paathugaappum
Ikkattil aesuvae adaikkalam (2)

1. Vellangal puranndumothinaalum
Ullathin uruthi asaiyaathae
Yaelu madangu neruppu naduvilum
Yesu nammodangu nadakkintar (2)

2. Aalathinintum naam kooppiduvom
Aathiramaay vanthu thappuvippaar
Kappalin pinnanni nithirai seythidum
Karthar nammodanngu kavalai aen? (2)

3. Kaathirunthu belan pettiduvom
Kartharin arputham kanndiduvom
Jevananalum maranamanalum nam
Thevanin anbil nilaithiruppom (2)

4. Yesu nam yuthangal nadathuvaar
Yettiduvom entum jeyakkodi
Yaavaiyum jeyithu vaanathilparanthu
Yaesuvai santhithu aananthippom (2)

சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார் (2)

எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்க பலம் பாதுகாப்பும்
இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் (2)

1. வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
இயேசு நம்மோடங்கு நடக்கின்றார் (2)

2. ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடங்கு கவலையேன் (2)

3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம்
தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் (2)

4. இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram