தமிழ் வரிகள்
ஆனந்தமே பரமானந்தமே – இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே
சரணங்கள்
1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே
2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே நான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே
3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே
4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ — ஆனந்தமே
5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார் — ஆனந்தமே
6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை — ஆனந்தமே
தமிழ் + English
ஆனந்தமே பரமானந்தமே – இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே
Anandhame paramaanandhame Yesu
Annalai andinork aanandhame
1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே
Indha puvi oru sondham alla endru
Yesu en nesar mozhindhanare
Ikkattum thunbamum Yesuvin thondarkku
Ingeye pangaai kidaithidinum Anandhame
2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே நான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே
Karthaave neer endhan karunya kottaiye
Kaaranam indri kalangene naan
Visvaasa pezhaiyil melogam vandhida
Meviye sukkan pidithidume – Anandhame
3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே
Ennullame unnil sanjalam yen veenai
Kanneerin pallathakkallo idhu
Seeyon nagarathil seekiram sendru naam
Jeya geetham paadi magizhndhidalaam – Anandhame
4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ — ஆனந்தமே
Koodara vaasigalaagum namakkingu
Veedendrum naadendrum sollalaamo
Kaivelai illadha veedondrai mele thaan
Seiven ena solli pogalaiyo – Anandhame
5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார் — ஆனந்தமே
Thunbangal thollai idukkan idar ivai
Thondar emai andi vandhidinum
Solli mudiyadha aarudhal kirubaiyai
Thunbathin oode anuppiduvaar – Anandhame
6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை — ஆனந்தமே
Yesuve seekiram itharai vaarume
Ezhai veguvaai kalangugirene
En nesar than muka jothiyadhe allamal
Inbam tharum porul edhum illai – Anandhame
English
Anandhame paramaanandhame Yesu
Annalai andinork aanandhame
1 Indha puvi oru sondham alla endru
Yesu en nesar mozhindhanare
Ikkattum thunbamum Yesuvin thondarkku
Ingeye pangaai kidaithidinum – Anandhame
2 Karthaave neer endhan karunya kottaiye
Kaaranam indri kalangene naan
Visvaasa pezhaiyil melogam vandhida
Meviye sukkan pidithidume – Anandhame
3 Ennullame unnil sanjalam yen veenai
Kanneerin pallathakkallo idhu
Seeyon nagarathil seekiram sendru naam
Jeya geetham paadi magizhndhidalaam – Anandhame
4 Koodara vaasigalaagum namakkingu
Veedendrum naadendrum sollalaamo
Kaivelai illadha veedondrai mele thaan
Seiven ena solli pogalaiyo – Anandhame
5 Thunbangal thollai idukkan idar ivai
Thondar emai andi vandhidinum
Solli mudiyadha aarudhal kirubaiyai
Thunbathin oode anuppiduvaar – Anandhame
6 Yesuve seekiram itharai vaarume
Ezhai veguvaai kalangugirene
En nesar than muka jothiyadhe allamal
Inbam tharum porul edhum illai – Anandhame
[Cm]ஆனந்தமே பரமானந்தமே [D#]இயேசு
{aananthame paramananthame iyesu}
[Fm]அண்ண[Gm]லை [Cm]அண்டினோர்க்காந்தமே
{annalai antinorkkanthame}
[Cm]ஞான இரட்சகரென் [D#]பாவம் [G#]மன்னித்ததால்
{nyana iratsakaren pavam manniththathal}
[Fm]ஆனேன் [Gm]அவருக்குள் [Cm]ஆனந்தமே)
{aanen avarukkul aananthame}
[Cm]இந்தப் புவி ஒரு [D#]சொந்தமல்லவென்று
{inthap puvi oru sonthamallavenru}
[Fm]இயேசு என் [Gm]நேசா [Cm]மொழிந்தனரே
{iyesu en nesa mozhinthanare}
[Cm]இக்கட்டு துன்பமும் [D#]இயேசுவின் [G#]தொண்டர்க்கு
{ikkattu thunpamum iyesuvin thontarkku}
[Fm]இங்கேயே [Gm]பங்காய் [Cm]கிடைத்திடினும்
{ingkeye pangkay kitaiththitinum}
[Fm]—[Gm]ஆனந்த[Cm]மே
{—aananthame}
[Cm]கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய [D#]கோட்டையே
{karththave nir enthan karunya kottaiye}
[Fm]காரணமின்றி [Gm]கலங்கேனே [Cm]யான்
{karanaminri kalangkene yan}
[Cm]விசுவாச பேழையில் [D#]மேலோகம் [G#]வந்திட
{visuvasa pezhaiyil melokam vanthita}
[Fm]மேவியே [Gm]சுக்கான் [Cm]பிடித்திடுமே
{meviye sukkan pitiththitume}
[Fm]—[Gm]ஆனந்த[Cm]மே
{—aananthame}
[Cm]என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் [D#]வீணாய்
{ennullame unnil sanysalam een vinay}
[Fm]கண்ணீரின் [Gm]பள்ளத்தாக்கல்லோ [Cm]இது
{kannirin pallaththakkallo ithu}
[Cm]சீயோன் நகரத்தில் [D#]சீக்கிரம் சென்று [G#]நாம்
{siyon nakaraththil sikkiram senru nam}
[Fm]ஜெயகீதம் [Gm]பாடி [Cm]மகிழ்ந்திடலாம்
{jeyakitham pati makizhnthitalam}
[Fm]—[Gm]ஆனந்த[Cm]மே
{—aananthame}
[Cm]கூடார வாசிகளாகும் [D#]நமக்கிங்கு
{kutara vasikalakum namakkingku}
[Fm]வீடென்றும் [Gm]நாடென்றும் [Cm]சொல்லலாமோ
{vitenrum natenrum sollalamo}
[Cm]கைவேலையல்லாத [D#]வீடொன்றை [G#]மேலே
{kaivelaiyallatha vitonrai mele}
[Fm]தான் செய்வேன் [Gm]எனச்சொல்லி [Cm]போகலையோ
{than seyven enassolli pokalaiyo}
[Fm]—[Gm]ஆனந்த[Cm]மே
{—aananthame}
[Cm]துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் [D#]இவை
{thunpangkal thollai itukkan itar ivai}
[Fm]தொண்டர் எமை [Gm]அண்டி [Cm]வந்திடினும்
{thontar emai anti vanthitinum}
[Cm]சொல்லி முடியாத [D#]ஆறுதல் [G#]கிருபையை
{solli mutiyatha aaruthal kirupaiyai}
[Fm]துன்பத்தினூ[Gm]டே [Cm]அனுப்பிடுவார்
{thunpaththinute anuppituvar}
[Fm]—[Gm]ஆனந்த[Cm]மே
{—aananthame}
[Cm]இயேசுவே சீக்கிரம் இத்தரை [D#]வாருமேன்
{iyesuve sikkiram iththarai varumen}
[Fm]ஏழை [Gm]வெகுவாய் [Cm]கலங்குகிறேன்
{eezhai vekuvay kalangkukiren}
[Cm]என் நேசர் [D#]தம்முக [G#]ஜோதியேதேயல்லாம்
{en nesar thammuka jothiyetheyallam}
[Fm]இன்பம் தரும் [Gm]பொருள் [Cm]ஏதமில்லை
{inpam tharum porul eethamillai}
[Fm]—[Gm]ஆனந்த[Cm]மே
{—aananthame}
English Meaning
Joy, supreme joy—O Jesus
Joy for those who have come and taken refuge in the Lord
1 This world is not our true home, the Lord Jesus declared to me
For His servants, suffering and troubles are also allotted here
Yet even if we receive them as our portion on this earth
Still there is joy
2 O Lord, You are my fortress of mercy
Without reason I will not be troubled
In the ark of faith, until I reach the heavenly realm
Guide me and hold the helm of my life
Still there is joy
3 Why are you troubled within, O my soul, in vain?
This is only a valley of tears!
Soon we will go to the city of Zion
And rejoice by singing songs of victory
Still there is joy
4 We are only pilgrims living in tents here
Can we call this place our home or our country?
He has said, “I will prepare a home above
Not made by human hands”
Still there is joy
5 Troubles, distress, hardships, and suffering may come
Even if they surround the servants of God
He will send comfort and grace beyond words
Even in the midst of suffering
Still there is joy
6 Come quickly, Lord Jesus, to this earth
I, the weak one, am greatly troubled
Apart from the light of my Beloved’s face
There is nothing that can give true joy
Still there is joy