Sthothiram seyvaenae iratchaganai (3)
Paathiramaaga immaathiram karunai vaitha (2)
Paathiranai yootha kothiranai - Entum
1. Annai marisuthanai
Pulmeethu amilnthu kaluthavanai (3)
Munnanai meethutta sinna kumaaranai (2)
Munnurai noorpadi innilathuttonai
2. Kanthai pothinthavanai
Vaanorgalum vanthadi panibavanai (3)
Manthaiyarkaanantha maatchiyali thonai (2)
Vaana baran ennum nyaana guruvaanai
3. Semponuruvanai
Thaesigargal thaedum guravaanai (3)
Ambaramaeviya umbar ganathodu (2)
Anbu pera nintu paimpon malar thuvi
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை (3)
பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த (2)
பாத்திரனை யூத கோத்திரனை - என்றும்
1. அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை (3)
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை (2)
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை
2. கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை (3)
மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை (2)
வான பரன் என்னும் ஞான குருவானை
3. செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குருவானை (3)
அம்பரமேவிய உம்பர் கணத்தோடு (2)
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி