Thanthaen ennai Yesuvae
Intha naeramae umakkae (2)
Unthanukkae ooliyanj seyya
Thanthaen ennai thaangiyarulum (2)
1. Jeeva kaalam muluthum
Thaeva pani seythiduvaen (2)
Poovil kadum por purigaiyil
Kaavum unthan karathinil vaithu (2)
2. Ulagor ennai nerukki
Balamaay yutham seythidinum (2)
Nalamaay sarva aayutham poondu
Naanilathinil naathaa velluvaen (2)
3. Unthan sithamae seyvaen
Enthan sitham olithiduvaen (2)
Entha idam enakku kaattinum
Yesuvae angae itho pogiraen (2)
4. Kashdam nashdam vanthaalum
Thushdar koodi soolnthittalum (2)
Ashdathikkum aalum thaevanae
Adiyaen ummil amara seythidum (2)
5. Ondrumillai naan aiyaa
Ummaalanti ontum seyyaen (2)
Antu seeshargalukkalitha aaviyaal
Inte adiyaenai nirappum (2)
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே (2)
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் (2)
1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன் (2)
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து (2)
2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும் (2)
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் (2)
3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் (2)
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் (2)
4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும் (2)
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் (2)
5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன் (2)
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் (2)