Umakku piriyamanathai seiya
Enakku katru thaarum theyvamae (2)
Neerae en thaevan
Um nalla parisutha aaviyanavar
Semmaiyana valiyilae
Nadatha vaendumae (2)
Maegasthambamae
Akini sthambamae
Thaetrum theyvamae
Thunaiyalarae (2) - Umaku
1. Ummai nokki en kaigalai
Uyarthi uyarthi magilginten aiyaa (2)
Varanda nilam thavipathu pol
En aanmaa umakaaga ovvoru naalum
Yengi yengi thavikintathaiyaa (2)
Enathu yekamae
Enathu piriyamae
Enathu pasamae
Enathu aasaiyae (2) - Umaku
2. Umathu anbai athigalaiyil
Kana seium karunai nesarae (2)
Ummaiyae nambi ullan
Neer virumbum um nalla pathaigalai
Thinanthorum katta vendum
Thivya natharae (2)
Anbin sigaramae
Aaruyirae
Anaikum theivamae
Aaruthalae (2) - Umaku
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே (2)
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே (2)
மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே
துணையாளரே (2) - உமக்கு
1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா (2)
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா (2)
எனது ஏக்கமே
எனது பிரியமே
எனது பாசமே
எனது ஆசையே (2) - உமக்கு
2. உமது அன்பை அதிகாலையில்
காணச் செய்யும் கருணை நேசரே (2)
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே (2)
அன்பின் சிகரமே
ஆருயிரே
அணைக்கும் தெய்வமே
ஆறுதலே (2) - உமக்கு