Unthan sitham pola ennai
Ovvoru naalum nadathum
Enthan sitham pola alla
En pithaavae en thaevanae (2)
1. Inbamulla jeeviyamo
Athiga selvam maenmaigalo
Thunbamatra vaalvugalo
Thaedavillaiyae adiyaan (2)
2. Naer valiyo nirapaanatho
Neendathuvo kurugiyatho
Paaram sumanthoduvatho
Paaril bakyamanathuvae (2)
3. Yethu nalamentariya
Illai njanam ennil naathaa
Theethilaa naamam nimitham
Neethi valiyil thirupi (2)
4. Akni maega sthambangalal
Adiyaenai entrum nadathi
Anuthinamum kooda irunthu
Appanae aaseervathiyum (2)
உந்தன் சித்தம் போல என்னை
ஒவ்வொரு நாளும் நடத்தும்
எந்தன் சித்தம் போல அல்ல
என் பிதாவே என் தேவனே (2)
1. இன்பமுள்ள ஜீவியமோ
அதிக செல்வம் மேன்மைகளோ
துன்பமற்ற வாழ்வுகளோ
தேடவில்லையே அடியான் (2)
2. நேர் வழியோ நிரப்பானதோ
நீண்டதுவோ குறுகியதோ
பாரம் சுமந்தோடுவதோ
பாரில் பாக்கியமானதுவே (2)
3. ஏது நலமென்ற்றிய
இல்லை ஞானம் என்னில் நாதா
தீதிலா நாமம் நிமித்தம்
நீதி வழியில் திருப்பி (2)
4. அக்கினி மேக ஸ்தம்பங்களில்
அடியேனை என்றும் நடத்தி
அனுதினமும் கூட இருந்து
அப்பனே ஆசீர்வதியும் (2)