Sandhoasham pongudhae (2)
Sandhoasham ennil pongudhae
Allaelooyaa
Yaesu ennai ratchithaar
Mutrum ennai maatrinaar
Sandhoasham pongi pongudhae
1. Vazhi thappi naan thirindhaen – Paava
Pazhiyadhai sumanthalaindhaen (2)
Avar anbu kuralae
azhaithadhu enaiyae
Andha inba naalil endhan (2)
paavam neengitrae – Sandhoasham
2. Sathuru soadhithida - Dhaeva
Utharavudan varuvaan (2)
Aanaal yaesu kaividaar
thaanaai vandhu ratchippaar
Indha nalla yaesu endhan (2)
Sondhamaanaarae – Sandhoasham
3. Paavathil jeevippavar
Baadhaalathil azhindhiduvaar (2)
Naano paralogathil
Naalum paadal paadiduvaen (2)
Ennil vaalum Yesuvodu
Entum vaaluvaen – Sandhoasham
சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன் (2)
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே (2)
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்
2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான் (2)
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார் (2)
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே – சந்தோஷம்
3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார் (2)
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன் (2)
என்னில் வாழும் இயேசுவோடு
என்றும் வாழுவேன் – சந்தோஷம்