WCF London Logo

World Christian Fellowship

தம் கிருபை பெரிதல்லோ

Tham Kirubai Peridhallo

Sarah Navaroji
சாரா நவரோஜி

Tham kirubai peridhallo
Em jeevanilum adhae
Immattum kaathadhuvae
Innum thaevai kirubai thaarumae (2)

1. Thaazhmai ullavaridam
Thangidudhae kirubai (2)
Vaazhnaal ellaam adhu poadhumae
Sugamudan tham belamudan (2)
Saevai seiyya kirubai thaarumae (2)

2. Nirmoolamaagaadhadhum
Nirpadhumoa kirubai (2)
Neesan en paavam neenginadhae
Nithiya jeevan petru kondaen (2)
kaathu kolla kirubai thaarumae (2)

3. Dhinam adhigaalaiyil
Thaedum pudhukirubai (2)
Manam thalarndha naerathilum
Belaveena sareerathilum (2)
Podhumae um kirubai thaarumae (2)

4. Maa parisutha sthalam
Kandadaivaen kirubai (2)
Moodum thirai kizhindhidavae
Dhairiyamaai sagaayam pera (2)
Thaedi vandhaen kirubai thaarumae (2)

5. Ondrai ondru sandhikkum
Sathiyam um kirubai (2)
Endrum maravaen vaakkuthatham
Needhiyumae samaadhaanamumae (2)
Nilai nirkum kirubai thaarumae (2)

6. Sthothira jebathinaal
Perugudhae kirubai (2)
Aathuma baaram kanneerodae
Soarvindri naanum vaendidavae (2)
Jeba varam kirubai thaarumae (2)

7. Karthar velippadum naal
Alithidum kirubai (2)
Kaathirundhae adaindhidavae
Yaesuvae ummai sandhikkavae (2)
Irakkamaai kirubai thaarumae (2)

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே (2)

1. தாழ்மை உள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை (2)
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன் (2)
சேவை செய்யக் கிருபை தாருமே (2)

2. நிர்மூலமாகாததும்
நிற்பதுமோ கிருபை (2)
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன் (2)
காத்துக் கொள்ள கிருபை தாருமே (2)

3. தினம் அதிகாலையில்
தேடும் புதுக்கிருபை (2)
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும் (2)
போதுமே உம் கிருபை தாருமே (2)

4. மா பரிசுத்த ஸ்தலம்
கண்டடைவேன் கிருபை (2)
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற (2)
தேடி வந்தேன் கிருபை தாருமே (2)

5. ஒன்றை ஒன்று சந்திக்கும்
சத்தியம் உம் கிருபை (2)
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமுமே (2)
நிலை நிற்கும் கிருபை தாருமே (2)

6. ஸ்தோத்திர ஜெபத்தினால்
பெருகுதே கிருபை (2)
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே (2)
ஜெப வரம் கிருபை தாருமே (2)

7. கர்த்தர் வெளிப்படும் நாள்
அளித்திடும் கிருபை (2)
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே (2)
இரக்கமாய்க் கிருபை தாருமே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram