WCF London Logo

World Christian Fellowship

குணப்படு பாவி தேவ

Gunappadu Pavi Thaeva

Gunappadu paavi thaeva
Kobam varum maevi – ippo (2)
Ganappoluthinil kaayam marainthupom
Kaalamirukkaiyil seelamathaaga nee

1. Karthanai nee maranthaay – avar
Karpanaiyai thuranthaay (2)
Bakthiyinmai therinthaay – pollaa
Paava vali thirinthaay (2)
Puthiketta aattu kuttiyae oti vaa
Uthama maeypanaar kathi alaikkiraar

2. Thukkamadaiyaayo? paavi
Thuyaramaagaayo? (2)
Mikka pulambaayo? – manam
Melinthurugaayo? (2)
Ikkanam paava kasappai yunaraayo?
Thakka arumarai pakkan thodaraayo?

3. Thaavee tharasanaippol – thannai
Thaalthum manaaseyaippol (2)
Paavi manushiyaippol – manam
Pathaitha paethurupol (2)
Thaevanukkaerkaatha theemaiseythaenentu
Koovi pulambu nal aaviyin sorbadi

4. Unnai nee nambaathae! – iv
Vulagaiyum nambaathae (2)
Ponnai nee nambaathae – ep
Porulaiyum nambaathae (2)
Thannai paliyitu tharanni meettavar
Ninnaiyum ratchippaar anaivarai pattu

குணப்படு பாவி தேவ
கோபம் வரும் மேவி – இப்போ (2)
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ

1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய் (2)
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய் (2)
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ? (2)
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ? (2)
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் – தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல் (2)
பாவி மனுஷியைப்போல் – மனம்
பதைத்த பேதுருபோல் (2)
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

4. உன்னை நீ நம்பாதே! – இவ்
வுலகையும் நம்பாதே (2)
பொன்னை நீ நம்பாதே – எப்
பொருளையும் நம்பாதே (2)
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram