தமிழ் வரிகள்
பரனே, உனை நம்பினேன்;
உரமுடன் தாங்கையா
அருள் தருவாயே; அகம் வருவாயே;
திரிவினை தீர்த்து விடுவாயே; ஓகோ! – பரனே
மானில மீது வரும் பலன் ஏது?
வானில் எனைச் சேர்த்திடு வாயே; ஓகோ! – பரனே
அலகையை ஜெயித்தாய், அதின் திறம் அழித்தாய்;
உலக அழுக்கனைத்தும் துடைத்தாய்; ஓகோ! – பரனே
பாவிகட்காக, பரனே, நீ சாக
பூ உலகில் வந்ததற்காக, ஓகோ; – பரனே
தீயர்கள் உய்யத் தேவரீர் செய்ய
மாய உலகில்வந்து மாண்டாய், ஓகோ! – பரனே
விசுவாசம் தரவும், விசும்பில் யான் வரவும்
அசுசி அகற்றவும், அடியேனே ஓகோ! – பரனே
தமிழ் + English
பரனே, உனை நம்பினேன்;
உரமுடன் தாங்கையா
Parane, unai nambinen;
Uramudan thaangaiyaa
அருள் தருவாயே; அகம் வருவாயே;
திரிவினை தீர்த்து விடுவாயே; ஓகோ! – பரனே
Arul tharuvaaye; agam varuvaaye;
Thirivinai theerthu viduvaaye; oho! – Parane
மானில மீது வரும் பலன் ஏது?
வானில் எனைச் சேர்த்திடு வாயே; ஓகோ! – பரனே
Maanila meedhu varum palan yedhu?
Vaanil enai serththidu vaaye; oho! – Parane
அலகையை ஜெயித்தாய், அதின் திறம் அழித்தாய்;
உலக அழுக்கனைத்தும் துடைத்தாய்; ஓகோ! – பரனே
Alagaiyai jeyiththaai, adhin thiram azhiththaai;
Ulaga azhukkanaiththum thudaiththaai; oho! – Parane
பாவிகட்காக, பரனே, நீ சாக
பூ உலகில் வந்ததற்காக, ஓகோ; – பரனே
Paavikatkaaga, Parane, nee saaga
Poo ulagil vandhadharkaaga, oho; – Parane
தீயர்கள் உய்யத் தேவரீர் செய்ய
மாய உலகில்வந்து மாண்டாய், ஓகோ! – பரனே
Theeyargal uyyath Dhevareer seiyya
Maaya ulagil vandhu maandaai, oho! – Parane
விசுவாசம் தரவும், விசும்பில் யான் வரவும்
அசுசி அகற்றவும், அடியேனே ஓகோ! – பரனே
Visuvaasam tharavum, visumbil yaan varavum
Asuchi agatravum, adiyeane oho! – Parane
English
Parane, unai nambinen;
Uramudan thaangaiyaa
Arul tharuvaaye; agam varuvaaye;
Thirivinai theerthu viduvaaye; oho! – Parane
Maanila meedhu varum palan yedhu?
Vaanil enai serththidu vaaye; oho! – Parane
Alagaiyai jeyiththaai, adhin thiram azhiththaai;
Ulaga azhukkanaiththum thudaiththaai; oho! – Parane
Paavikatkaaga, Parane, nee saaga
Poo ulagil vandhadharkaaga, oho; – Parane
Theeyargal uyyath Dhevareer seiyya
Maaya ulagil vandhu maandaai, oho! – Parane
Visuvaasam tharavum, visumbil yaan varavum
Asuchi agatravum, adiyeane oho! – Parane
English Meaning
O Lord, I have trusted in You;
Strengthen me and uphold me
Give me Your grace; come and dwell within me;
Remove all my sins completely; O Lord
What is the benefit of what comes in this world?
Take me and unite me in heaven; O Lord
You have conquered the devil and destroyed his power;
You have washed away all the uncleanness of the world; O Lord
For sinners’ sake, O Lord, You died
You came into this world of earth for that purpose; O Lord
For the salvation of the wicked, You came to act, O Lord
You came into this fallen world and gave Your life; O Lord
To give me faith, and to bring me to heaven,
And to cleanse me from impurity, I come before You, O Lord