Aananthamaay inba kaanan yegiduvaen
Thooya pithaavin mugam tharisipaen (2)
Naalukku naal arputhamaay
Ennai thaangidum
Naathan Yesu ennodiruppaar (2)
1. Setrinintrenai thookkiyeduthu
Maatri ullam puthithaakinarae (2)
Kallaana en ullam
Urukina kalvaariyai
Kandu nantiyudan padiduvaen (2)
2. Vaaliba naalil Yesuvai kandaen
Vaanjaiyudan ennai thaedivanthaar (2)
Etharkumae uthava
Enaiyum kandeduthaar
Yesuvin anbai naan en solluvaen (2)
3. Kartharin sitham seythida nitham
Thatham seythae ennai arpanithaen (2)
Yesu allaal aasai
Ippoviyil vaerae illai
Entrum enakavar aatharavae (2)
4. Ummai pinsentru ooliyam seythu
Um paatham sernthida vaanjikiraen (2)
Tharum thevaa elaiku
Maratha umkirubai
Kanparum entum naan um adimai (2)
5. Thaetiduthae um vaakugal ennai
Aatiduthae unthan samoogamae (2)
Belathin mael belanadainthu
Naan seruvaen
Paerinba seeyonil valnthiduvaen (2)
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் (2)
நாளுக்கு நாள் அற்புதமாய்
என்னை தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார் (2)
1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே (2)
கல்லான என் உள்ளம்
உருக்கின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் (2)
2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடிவந்தார் (2)
எதற்குமே உதவா
என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் (2)
3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன் (2)
இயேசு அல்லால் ஆசை
இப்பூவியில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே (2)
4. உம்மைப் பின்சென்று ஊழியம் செய்து
உம் பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் (2)
தாரும் தேவா ஏழைக்கு
மாறாத உம்கிருபை
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை (2)
5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே (2)
பெலத்தின் மேல் பெலனடைந்து
நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் (2)