1. Arpanithaen ennai mutrilumaai
arputha naathaa um karathil
anaithum umakkae sontham entru
anbarae ennaiyae thatham seythaen (2)
Anaithum kiristhuvukkae - enthan
anaithum arpanamae
en muluthanmaigal aavalgalum
anaithum kiristhuvukkae (2)
2. En ennampola naan alainthaenae
ennai thaduthitathaarumillai
um siluvai anbai santhithaenae
norungi veelnthaenae um paathathil (2)
3. Aimbulangal yaavum adangida
aimperung kaayangal aetra naathaa
vaanpuvi kiragangal aalbavarae
ennaiyum aandida neerae vallor (2)
4. En vaalvil ilantha nanmaikeedaay
enjiya naatkalil ulaipaenae
neer thantha eevu varangal yaavum
um panni siranthida mutrum thanthaen (2)
1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன் (2)
அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே (2)
2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பை சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் (2)
3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் (2)
4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன் (2)