WCF London Logo

World Christian Fellowship

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

Yesuvai nambinor maanndadhillai

Levlin Samuel
லெவலில் சாமுவேல்

Yesuvai nambinor maanndadhillai
Ennenna thunpangal naerittalum
Singathin vaayinindrum iratchippaar
Bangam varaadhennai aadharippaar

Nenjamae nee anjidaathae
Nampinoraik kirubai soolnthiduthae
Immattum kaathavar immaanuvael
Innamum kaathunnai nadathuvaar

Naasiyil suvaasamulla maandharai
Nambuvathalla tham aalosanai
Gora Bayangara kaattadithum
Kanmalai mael kattum veedu nirkum - Nenjamae nee

Visuvaasathaal needhimaan pilaippaan
Varatchi mikundha kaalathilum
Pakthan valathupaarisaththilae
Karthar thaam nirpadhaal asaindhidaan - Nenjamae nee

Yesuvin naamaththil jeyam pette
Aekip paranthodum paktharotae
Sernthentum vaalnthidum aikkiyaththilae
jeya kempeeramae unakkunntae - Nenjamae nee

Elai un aathmaa paathaalaththil
Endrum alinthidavittu vidaar
Tham samookam nithya paerinbamae
Sampoorna aanandham pongidumae - Nenjamae nee

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்- நெஞ்சமே நீ

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான் - நெஞ்சமே நீ

இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே - நெஞ்சமே நீ

ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே - நெஞ்சமே நீ

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram