Manam Irangum Deivam Yesu
Sugam thanthu nadathi selvaar (2)
Yehovaa raphaa.. intum vaalgintar
Sugam tharum theyvam Yesu
Sugam intu tharugiraar
1. Pethuru veettukul nulainthaar - Maami
Karathaipidithuthookinaar (2)
Kaaychal udanae antu neengittu
Karthar thonduseythu magilnthaal (2)
2. Kushdarogiyai kandaar - Yesu
Karangal neeti thottar (2)
Sithamundu suthamaagu - Entu
Solli sugathai thanthaar (2)
3. Nimira mudiyaatha kooni - Antu
Yesu avalai kandaar (2)
Kaigal avalmaelae vaithaar udan
Nimirnthu thuthika seythaar (2)
4. Piravikkurudan parthimaeyu - Antu
Yesuvae irangum entan (2)
Parvaiyadainthu magilnthaan udan
Yesu pinnae nadanthaan (2)
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார் (2)
யேகோவா ரஃப்பா.. இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் - மாமி
கரத்தைபிடித்துதூக்கினார் (2)
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் (2)
2. குஷ்டரோகியை கண்டார் - இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார் (2)
சித்தமுண்டு சுத்தமாகு என்று
சொல்லி சுகத்தைத் தந்தார் (2)
3. நிமிர முடியாத கூனி - அன்று
இயேசு அவளைக் கண்டார் (2)
கைகள் அவள்மேலே வைத்தார் உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார் (2)
4. பிறவிக்குருடன் பர்திமேயு - அன்று
இயேசுவே இரங்கும் என்றான் (2)
பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
இயேசு பின்னே நடந்தான் (2)