Idukkamana vasal valiyae
Varunthi nulaiya muyantiduvom (2)
Siluvai sumanthu Yesuvin pin
Siritha mugamaay sentiduvom (2)
1. Vaalvukku sellum vaasal
Idukkamanathu (2)
Paralogam sellum paathai
Kurugalanathu (2) - Siluvai
2. Naam kaanum intha ulagam
Oru naal marainthidum (2)
Puthu vaanam boomi nokki
Payanam seygintom (2) - Siluvai
3. Ivvalvin thunbam ellaam
Silakaalam thaan needikkum (2)
Inaiyilatha magimai
Inimael namakundu (2) - Siluvai
4. Alivukku sellum vaayil
Migavum agantathu (2)
Paathaalam sellum paathai
Migavum virinthathu (2) - Siluvai
இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம் (2)
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்
1. வாழ்வுக்கு செல்லும் வாசல்
இடுக்கமானது (2)
பரலோகம் செல்லும் பாதை
குறுகலானது (2) - சிலுவை
2. நாம் காணும் இந்த உலகம்
ஒரு நாள் மறைந்திடும் (2)
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம் (2) - சிலுவை
3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும் (2)
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு (2) - சிலுவை
4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது (2)
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது (2) - சிலுவை