Andavarae um paatham saranadainthaen
Adimai naan aiyaa (2)
Aayiram aayiram thunbangal vanthaalum
Agantu poga maattaen – ummai vittu
Agantu poga maataen
1. Ovvoru naalum um kural kaetu
Athanbadi nadakinten (2)
Ulaginai maranthu ummaiyae nokki
Odi varuginten (2) - Aandavarae
2. Vaaliban thanathu valithanaiyae
Ethanaal sutham panuvaan (2)
Thaevanae umathu vaarthaiyinbadiyae
Kaathu kolvathanaal (2) - Aandavarae
3. Vaethathilulla athisayam anaithum
Nangu puriyumbadi (2)
Thaevanae enathu kangalaiyae
Thinamum thirantharulum (2) - Aandavarae
4. Naan nadapatharku paathaiyai kaattum
Theebamae um vasanam (2)
Sellum valikkum velichamum athuvae
Thaevanae um vaakku (2) - Aandavarae
5. Thaevanae umakku ethiraay naan
Paavam seyyaathapadi (2)
Umathu vaakai en iruthayathil
Pathithu vaithullaen (2) - Aandavarae
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா (2)
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போக மாட்டேன் – உம்மை விட்டு
அகன்று போக மாட்டேன் - ஆண்டவரே
1. ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன் (2)
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன் (2) - ஆண்டவரே
2. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான் (2)
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால் (2) - ஆண்டவரே
3. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி (2)
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும் (2) - ஆண்டவரே
4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம் (2)
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு (2) - ஆண்டவரே
5. தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி (2)
உமது வாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன் (2) - ஆண்டவரே