Kalaiyum maalaiyum
Evaelaiyum kartharai
Karuthudan paadiduvaen (2)
Parisuthar parisuthar parisuthar
Ena thoothar
Paadidum thoni kaetkuthae (2)
1. Karthar en velicham jeevanin belanum
Kirubaiyai iratchipumaanaar (2)
Anjidaamal kalangaamal
Bayaminti thigilinti
Anuthinam vaalnthiduvaen (2)
2. Enakethirai or paalaiyamirangi
Enmael or yutham vanthaalum (2)
Bayappaden ethiraali
Nimithamai sevvaiyaana
Paathaiyil nadathiduvaar (2)
3. Ontai naan kaettaen athaiyae naaduvaen
Entum tham magimaiyai kaana (2)
Jeevanulla naalellaam
Tham aalayathil thanguvathai
Vaanjithu naadiduvaen (2)
4. Theengu naalil tham koodaara maraivil
Thaedi serthennai maraippaar (2)
Unnathathil maraivaga
Olithennai paathugaathu
Uyarthuvaar kanmalaimael (2)
5. Enthan mugathai thaedungal entu
En karthar sonnathinaalae (2)
Tham mugathai thaeduvaenae
Kooppidum en satham kaettu
Tayavaaga bathilalippaar (2)
6. Thagappanum thaayum kaivittalum en
Karthar ennai serthukkolvaar (2)
Enthan ullam sthiramaaga
Thidamaaga kartharukkae
Ententum kaathirukkum (2)
7. Enakkaaga yaavum seythu mudippaar
En karthar vaakku maaridaar (2)
Thamakkentum bayanthidum
Bakthar yaavar viruppamum
Thavaraamal niraivaettuvaar (2)
காலையும் மாலையும்
எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன் (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எனத் தூதர்
பாடிடும் தொனி கேட்குதே (2)
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார் (2)
அஞ்சிடாமல் கலங்காமல்
பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன் (2)
2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் (2)
பயப்படேன் எதிராளி
நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார் (2)
3.ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண (2)
ஜீவனுள்ள நாளெல்லாம்
தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் (2)
4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் (2)
உன்னதத்தில் மறைவாக
ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல் (2)
5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே (2)
தம் முகத்தைத் தேடுவேனே
கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார் (2)
6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார் (2)
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத்
திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும் (2)
7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்குமாறிடார் (2)
தமக்கென்றும் பயந்திடும்
பக்தர் யாவர் விருப்பமும்
தவறாமல் நிறைவேற்றுவார் (2)