Umakaaga thaanae aiyaa - Naan
Uyir vaalgiraen aiyaa
Intha udalum ullamellaam anbar
Umakaaga thaanae aiyaa (2)
1. Kothumai manipol madinthiduvaen
Umakaay thinamum balan koduppaen (2)
Avamanam ninthai siluvaithanai (2)
Anuthinam umakaai sumakinten (2)
2. Enathu jeevanai mathikavillai
Oru porutai naan kanikavillai (2)
Ellaarukkum naan ellaamanaen (2)
Anaivarukkum naan adimaiyanaen (2)
3. Ethanai idargal vanthaalum
Ethuvum ennai asaipathillai (2)
Magilvudan thodarnthu odugiraen (2)
Mananiraivodu panni seivaen (2)
4. Enathu paechellaam umakaaga
Enathu seyalellaam umakaaga (2)
Elunthaalum nadanthaalum umakaaga (2)
Amarnthaalum paduthaalum umakaaga (2)
5. Panpaduthum um sithampola
Bayanpaduthumum um virupampola (2)
Umkarathil naan pullaangulal (2)
Ovvoru naalum isaithidumae (2)
உமக்காகத் தானே ஐயா - நான்
உயிர் வாழ்கிறேன் ஐயா
இந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர்
உமக்காகத்தானே ஐயா (2)
1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன் (2)
அவமானம் நிந்தை சிலுவைதனை (2)
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் (2)
2. எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை (2)
எல்லாருக்கும் நான் எல்லாமானேன் (2)
அனைவருக்கும் நான் அடிமையானேன் (2)
3. எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை (2)
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் (2)
மனநிறைவோடு பணி செய்வேன் (2)
4. எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயலெல்லாம் உமக்காக (2)
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக (2)
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக (2)
5. பண்படுத்தும் உம் சித்தம்போல
பயன்படுத்தும் உம் விருப்பம்போல (2)
உம்கரத்தில் நான் புல்லாங்குழல் (2)
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே (2)