Yaesuvin naamamae thirunaamam muzhu
Irudhayathaal thozhuvom naamum (3)
1. Kaasiniyil adhanu kinaiyillaiyae
Visuvasithavargaluku kuraiyillaiyae (2)
2. Itharaiyil metha adhisayanaamam
Adhai nithamun tholubavarku jeyanaamam (2)
3. Uthama magimai pirasitha naamam
Idhu sathiya vidhaeya manamotha naamam (2)
4. Vinavarum pannudan kondaadum naamam
Namai andidumpei payandhodum devanamam (2)
5. Patchamudan rachai seiyum ubagaari
Perum paava pinigal neekkum parigaari (2)
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும் (3)
1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே (2)
2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் (2)
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்த நாமம் (2)
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம் (2)
5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி (2)