Akkiniyil nadanthu vanthom
Aanal setham ondrum illaiyappa
Thanneerai kadanthu vanthom
Nangal moolgi pogavillaiyappa
Unga kirubai engalai vittu
Imaipoluthum vilakalappa (2)
Engal thaevan neer engal raja neer
Nangal potridum engal kanmalai neer (2)
1. Sengadalai neer pilantheer
Semmaiyana paathai thantheer
Erigovin kottaikalai
Um yosanaiyaal thagartheer
Goliyaathin koshangalai
Oru nodiyil vendruvitteer (2)
2. Palavitha sothanaiyaal
Pudamidapattom aiyaa
Ponnaaga matrivitteer
Puthu iruthayam thanthu vitteer
Engal thalaiyai ennaiyinaal
Abishegam seythu vitteer (2)
3. Varudangalai umathu
Kirubaiyinaal kadanthom
Inivarum naatkalellam
Unthan magimaithanai kaanbom
Engal aayul ullavarai
Yesu namathai uyarthiduvom (2)
அக்கினியில் நடந்து வந்தோம்
ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
தண்ணீரைக் கடந்து வந்தோம்
நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
உங்க கிருபை எங்களை விட்டு
இமைப்பொழுதும் விலகலப்பா (2)
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
நாங்கள் போற்றிடும் எங்கள் கன்மலை நீர் (2)
1. செங்கடலை நீர் பிளந்தீர்
செம்மையான பாதை தந்தீர்
எரிகோவின் கோட்டைகளை
உம் யோசனையால் தகர்த்தீர்
கோலியாத்தின் கோஷங்களை
ஒரு நொடியில் வென்றுவிட்டீர் (2)
2. பலவித சோதனையால்
புடமிடப்பட்டோம் ஐயா
பொன்னாக மாற்றிவிட்டீர்
புது இருதயம் தந்து விட்டீர்
எங்கள் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்து விட்டீர் (2)
3. வருடங்களை உமது
கிருபையினால் கடந்தோம்
இனிவரும் நாட்களெல்லாம்
உந்தன் மகிமைதனைக் காண்போம்
எங்கள் ஆயுள் உள்ளவரை
இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் (2)