Itho Manusharin Mathiyil
Devadhi Devane Vasam Seigirarey (2)
Devan Thabarikum Sthalamey
Tham Janatharin Mathiyilam (2)
Devan Thamavargal Devanairunthey
Kaneer Yavaiyum Thudaikindrarey (2)- Itho
Deva Alayamum Avarey
Thuya Olivilakum Avarey (2)
Jeevanaley Tham Janagalin Thagam Theerkum
Sutha Jeeva Nadhiyum Avarey (2)-Itho
Magimai Nirai Pooranamey
Maga Parisutha Sthalamadhuvey (2)
Endrum Thudhiyudaney Athin Vasaluley
Engal Pathangal Nirkirathey (2) -Itho
Seyoney Unn Vasalgalai
Jeeva Devaney Neysikirar (2)
Seer Migundhidum Mei Suvisheyshamthanai
Koori Uyarthiduvom Unaiyey (2) -Itho
Munnodiyai Yesu Paran
Moolaikallagi Seyoniley (2)
Vasam Seidhidum Unnadha Sigaramathai
Vanjaiyodu Nam Nadiduvom (2) -Itho
இதோ மனுஷரின் மத்தியில்
தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே (2)
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம் (2)
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே - இதோ
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே (2)
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே (2)- இதோ
மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே (2)
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே (2)- இதோ
சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார் (2)
சீர் மிகுந்திடு மிச் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே (2) -இதோ
முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே (2)
வாசம் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் (2)- இதோ