1. Urakkam thelivom urchagam kolvom
Ulagathin iruthi varai
Kalvaari thonithaan malai maari poliyum
Naalvarai ulaithiduvom (2)
2. Asutham kalaivom anbai alaipom
Aaviyil analum kolvom
Avar padai jeyikka nammidai karuthu
Vaetumaiyinti vaalvom (2)
3. Achcham thavirppom thairiyam kolvom
Sarithiram saatchi koorum
Iratha saatchigal nammidai thonti
Naathanukkaay madivom (2)
4. Kiristhuvukkaaga ilanthavar evarum
Tharithirar aanathillai
Iraajiya maenmaikaay kashdam adainthor
Nashtappattathillai (2)
5. Uyir peruveer ontu kooduveer
Ularntha elumbugalae
Neengal ariyaa oruvar ungal
Naduvil vanthuvittar (2)
1. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்
நாள் வரை உழைத்திடுவோம் (2)
2. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம் (2)
3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம் (2)
4. கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை - ராஜ்ய
மேன்மைக்காய் கஷ்டமடைந்தோர்
நஷ்டப் பட்டதில்லை (2)
5. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்து விட்டார் (2)