Appaa um kirubaigalaal - ennai
kaathu kondeerae
appaa um kirubaigalaal - ennai
anaithu konndeerae - 2
1. Thaangi nadathum kirubaiyithu
thaalvil ninaitha kirubaiyithu - 2
thanthaiyum thaayum kaivittalum
thayavaai kaakum kirubaiyithu - 2
2. Ennai ninaikum kirubaiyithu
ennai nadathum kirubaiyithu - 2
thanthaiyai pola tholil sumanthu
ennai nadathum kirubaiyithu - 2
3. Viyaathiyin naerathil kaatha kirubai
viduthalai kodutha thaeva kirubai - 2
soolnilaigal maarinaalum
maaraamal thaangitta thaeva kirubai - 2
4. Kashtathin naerathil kaatha kirubai
kanneerai maattrina thaeva kirubai - 2
thataigal yaavaiyum udaithu erinthu
vettriyai thanthitta thaeva kirubai - 2
அப்பா உம் கிருபைகளால் - என்னைக்
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் - என்னைக்
அணைத்துக் கொண்டீரே - 2
1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது - 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது - 2 - அப்பா
2. என்னை நினைக்கும் கிருபையிது
என்னை நடத்தும் கிருபையிது - 2
தந்தையைப் போல தோளில் சுமந்து
என்னை நடத்தும் கிருபையிது - 2 - அப்பா
3. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை - 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை - 2 - அப்பா
4. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை - 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை - 2 - அப்பா