Ummaithaan naan paarinten
Pragasam adaiginten (2)
Avamaanam adaivathillai
Appaa naan umathu pillai
Appaa naan umathu pillai - Orunaalum
Avamaanam adaivathillai
Appaa naan umathu pillai
Orunaalum avamaanam adaivathillai
1. Kangal neethimaanai paarkintana
Sevigal mantattai kaetkintana (2)
Idukkann neekki viduvikkinteer (2)
Iruthivarai neer nadathi selveer (2)
2. Udaintha nontha ullathodu
Koodavae irunthu paathugaakkinteer (2)
Anaega thunbangal sernthu vanthaalum (2)
Anaithintum neer viduvikkinteer (2)
3. Nallavar iniyavar en aandavar
Naalellaam suvaithu magilginten (2)
Unnmaiyaay kartharai thaedum enakku (2)
Oru nanmaiyum kuraivathillaiyae (2)
4. Thuthipen sthotharipen evelaiyum
Nantigeetham enaavil ennaeramum (2)
En athuma kartharukul menmai paratum (2)
Agamagilvaargal thunbappaduvor (2)
5. Thedinen koopiten bathil thanthere
Bayangal neekki paathukaatheerae (2)
Elumbugal narambugal murinthidaamal (2)
Yaegovaa thaevan paarthu kolveer (2)
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன் (2)
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை – ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை
1. கண்கள் நீதிமானை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன (2)
இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர் (2)
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் (2)
2. உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் (2)
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் (2)
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் (2)
3. நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் (2)
உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு (2)
ஒரு நன்மையும் குறைவதில்லையே (2)
4. துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும் (2)
என் ஆத்துமா கர்த்தருக்குள்
மேன்மை பாராட்டும் (2)
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர் (2)
5. தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே (2)
எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல் (2)
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர் (2)