Kartharai Nambiyae Jeevipom
Kavalai Kashtangal Theernthidum
Kaivida Kaathitum Paramanin
Karangalai Naam Patri Kolvom (2)
1. Jeevathaevan Pin Selluvom
Jeeva Olithanai Kandadaivom (2)
Manathin Kaarirul Neengidavae
Maasamaathaanam Thangum (2)
2. Unmai Vazhi Nadanthitum
Uthamanukkentum Karthar Thunai (2)
Kangal Avan Meethu Vaithiduvaar
Karuthaay Kaathiduvaar (2)
3. Ullamathin Paarangalai
Ookkamay Kartharidam Solluvom (2)
Ikkattu Naerathil Kuuppiduvom
Yaesu Vanthaatharippaar (2)
4. Anbumigum Annalivar
Arumai Iyaesuvai Nerunguvom (2)
Thammandai Vanthorai Thallidaarae
Thaangi Anaithiduvaar (2)
5. Neethimaanin Sirasinmael
Nithiya Aaseer Vanthirangumae (2)
Kirubai Nanmaigal Thodarumae
Kaetpathu Kidaikkumae (2)
6. Immaikkaetra Inbangalai
Nammai Vittae Mutrum Agatruvom (2)
Maaraatha Santhosham Thaediduvom
Marumai Iratjiyathil (2)
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் (2)
1. ஜீவ தேவன் பின் சொல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம் (2)
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் (2)
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை (2)
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் (2)
3. உள்ளமதின் பாரங்கள்
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் (2)
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் (2)
4. அன்பு மிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம் (2)
தம் மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார் (2)
5. நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே (2)
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே (2)
6. இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டு முற்றும் அகற்றுவோம் (2)
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை இராஜ்ஜியத்தில் (2)