Irul soolndha logathil
Imai poluthum thoongaamal (2)
Kannmani pol ennai
karththar Yesu kaaththaarae
Kaanangalaal niraindhu
Kaalamellaam paaduvaen (2)
Anjidaen anjidaen
En Yesu ennotiruppathaal (2)
Marana pallathaakkil
Naan nadantha vaelaigalil (2)
Kartharae ennodirundhu
Thaetrinaar tham kolinaal
Paaththiram nirambi valiya
Aaviyaal apishaekiththaar (2)- Anjidaen
Alaigal padagin mael
Modhiyae aalthinaalum (2)
Kadalmael nadantdhu vandhu
Kartharae ennai thookkinaar
Alaigal neekkiyavar
Amaidhi paduthinaar (2) - Anjidaen
இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல் (2)
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)
அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் (2)
மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில் (2)
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் (2)– அஞ்சிடேன்
அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும் (2)
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அலைகள் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் – அஞ்சிடேன்