WCF London Logo

World Christian Fellowship

உந்தன் சிநேக வாக்குகள்

Unthan Sinega Vakugal

Unthan sinega vakugal
Entum maridathathal
Ennai entrum vali nadathum
Unthan jeeva pathaiyil (2)

1. Koramam paviyam ennaum unthan
Kolgotha varaikum kondu senteer (2)
Kaluvineer neer enthan pava karaigalai
Kalainthen valkayin thurogangalai (2)

2. Sinegathin sigaramam en Yesu rajan
Sinthineerae kaneer siluvayilae (2)
Thaneerum rethamai vadinthathai kandaen
En kavalaigal theerkavae neer maritheer (2)

3. Thirukaram neeti ennai alaitha
Um maga sinegathai varnikavae (2)
Aayiram navugal pothathu swami
Eppadi marapen nan ummaiyae (2)

உந்தன் சிநேக வாக்குகள்
என்றும் மாறிடாததால்
என்னை என்றும் வழி நடத்தும்
உந்தன் ஜீவ பாதையில் (2)

1. கோரமாம் பாவியாம் என்னையும் உந்தன்
கொல்கொதா வரைக்கும் கொண்டு சென்றீர் (2)
கழுவினீர் நீர் எந்தன் பாவ கறைகளை
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை (2)

2. சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே (2)
தண்ணீரும் இரத்தமாய் வடிந்ததைக் கண்டேன்
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர் (2)

3. திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
உம் மகா சிநேகத்தை வர்ணிக்கவே (2)
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
எப்படி மறப்பேன் நான் உம்மையே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram