WCF London Logo

World Christian Fellowship

உங்க கிருபை இல்லாம

Unga Kirubai Illaama

Unga kirubai illama
Vala mudiyathaya
Unga kirubai illama
Vala theriyathaya

Nan nirpathum unga kirubai than
Nan nilaipathum unga kirubai than
Nan nirpathum nilaipathum
Unga kirubaithanapa - unga

1. Kaalai elunthavudan
Puthu kirubai thanguthu
Valnal muluvathum
Magilchikulae nadathuthu (2)
Nirmoolam aagaamalae
Ithuvarai katheer aiyaa
Belaveena naerangalil
Um kirubai Thangeenathaiyya

En aranum en kottai
Uyarntha adaikalam neerae (2) - Unga

2. Umathu kirubaiyinal
Sathurukalai alithiduveer
Aathumaavai sanjalapaduthum
Yaavaraiyum sangarippeer (2)
Umathu adimai naan aiyaa
Enathu theyvam neer aiyaa
Naan nambum kaedagam neerae
Enathu kottai neeraiyaa

En kottai en thurugam
Nan nambum kedagam nerae (2) Unga

3. Eppakam nerukapatum
Odungi nanum povathillai
Kirubai mael kirubai thanthu
Kaaloontri nadakka seytheer (2)
Maangalin kaalgalai pola
Belanaay oda seytheerae
Uyarntha sthalangalil ennai
Thidanaay nadakka seytheerae

En aranum en kottai
Uyarntha adaikalam neerae (2) - Unga

உங்க கிருபை இல்லாம
வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதய்யா (2)

நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும்
உங்க கிருபைதானப்பா - உங்க

1. காலை எழுந்தவுடன்
புது கிருபை தாங்குது
வாழ் நாள் முழுவதும்
மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது (2)
நிர்மூலம் ஆகாமலே
இதுவரை காத்தீரைய்யா
பெலவீன நேரங்களில்
உம் கிருபை தாங்கீனதைய்யா

என் அரணும் என் கோட்டை
உயர்ந்த அடைக்கலம் நீரே (2) - உங்க

2. உமது கிருபையினால்
சத்துருக்களை அழித்திடுவீர்
ஆத்துமாவை சஞ்சலபடுத்தும்
யாவரையும் சங்கரிப்பீர் (2)
உமது அடிமை நான் ஐயா
எனது தெய்வம் நீர் ஐயா
நான் நம்பும் கேடகம் நீரே
எனது கோட்டை நீரைய்யா

என் கோட்டை என் துருகம்
நான் நம்பும் கேடகம் நீரே (2) – உங்க

3. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நானும் போவதில்லை
கிருபை மேல் கிருபை தந்து
காலூண்டி நடக்க செய்தீர் (2)
மான்களின் கால்களை போல
பெலனாய் ஓட செய்தீரே
உயர்ந்த ஸ்தலங்களில் என்னை
திடனாய் நடக்க செய்தீரே

என் அரணும் என் கோட்டை
உயர்ந்த அடைக்கலம் நீரே (2) - உங்க

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram