Saalemin raja sangayin raja
Swamy vaarumen - Intha
Tharani meethinil aalugai seithida
Saduthi vaarumen (2)
1. Seekkiram varuvom enturaithupona
Selvakkumaaranae – intha
Seeyonin maathugal thaedithiriginta
Seythikaeleero? (2)
2. Etti etti ummai annaanthupaarthu
Kanpoothu poguthae – neer
Sutikkaattippona vaakkuthatham
Niraivaeralaaguthae (2)
3. Nangai erusalaem pattinam ummai
Naadithaeduthae – intha
Naanilathilulla jeevappiraanigal
Thaedivaaduthae (2)
4. Saatchiyaaga subavisesham
Thaaranni maevuthae – unthan
Saatchigaludaiya irathangalellaam
Thaavikkoovuthae (2)
சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன் (2)
1. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ? (2)
2. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே (2)
3. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே (2)
4. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே (2)