Ugantha kaanikaiyaai
Oppu koduthaenaiyaa (2)
Sugantha vaasanaiyaay
Mugarnthu magilumaiyaa (2)
1. Thagapanae um peedathil
Thagana baliyaanaen (2)
Akkini irakkividum
Mutrilum erithuvidum (2)
2. Vaendatha balaveenangal
Aandavaa mun vaikinten (2)
Meendum thalai thookaamal
Maandu madiyattumae (2)
3. Kangalai thooymaiyaakum
Karthaa umai paarkanum (2)
Kaathugal thirantharulum
Karthar um kural kaetkanum (2)
4. Appaa um samoogathil
Aarvamaay vanthaenaiyaa (2)
Thapaamal vanainthu kollum
Uppaaga bayanpaduthum (2)
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா (2)
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா (2)
1. தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன் (2)
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் (2)
2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன் (2)
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே (2)
3. கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் (2)
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும் (2)
4. அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா (2)
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும் (2)